சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.
தற்போது, ஓராண்டாக பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
அதன்படி, சென்னையில் இன்று (நவம்பர் 25) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை தற்போதைய விலையை விட குறைவாக இருந்தது. இதனால் வாகனங்களை பயன்படுத்தும் நாம் கடும் நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளோம்.
இத்தகைய சூழலில் தரம் குறைந்த பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவது ‛மைலேஜ்' அளவை குறைத்து விடும் சூழல் உள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் இயந்திரத்தில், எரிபொருளின் அளவு மற்றும் விலை ஆகியவற்றை காட்டும் டிஸ்ப்ளேவுக்கு அருகில் `அடர்த்தி' (Density) என்ற டிஸ்ப்ளே இருக்கும்.
இந்த ‛Density' அளவு தான் பெட்ரோல், டீசலின் தரத்தை குறிக்கிறது. அதாவது பெட்ரோலின் Density ஒரு கன மீட்டருக்கு 730 முதல் 800 கிலோ (Kg/m3) என்ற அளவிலும், டீசலின் Density 830 முதல் 900 கிலோ (Kg/m3) என்ற அளவிலும் இருக்க வேண்டும்.
இந்த அளவில் ‛Density' இருந்தால் அது தரமான பெட்ரோல் மற்றும் டீசல் என கூறலாம். இதன்மூலம் வாகனங்களின் மைலேஜ் அதிகரிக்கவும் செய்யும்.
இனி பெட்ரோல், டீசல் நிரப்ப சென்றால், கண்டிப்பாக ‛Density' எனும் டிஸ்பிளேவை பார்த்து நாம் நிரப்பும் பெட்ரோல், டீசல் தரமானதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.