Tap to Read ➤

மீன்களில் ஃபார்மலின் கலந்திருப்பதை எவ்வாறு கண்டறிவது ?

ஃபார்மலின் கலந்த மீன்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன?
Sidhanathan K
கடலில் இருந்து பிடிக்கப்படும் கடல் உணவுகளை அன்றைய நாளிலே சாப்பிடுவது தான் நல்லது.
மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளில் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.
ஃபார்மலின் பொதுவாக இறந்த உடல்களை பதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டது.
ஃபார்மலின் ஒரு உயிர்கொல்லியாகும். அதனை உணவுப் பொருட்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கடல் உணவுகளில் பார்மலின் கலந்திருந்தால் அதன்மேல் ஈக்கள் மொய்க்காது, வாசனையும் வராது.
மீனை அழுத்திப் பார்த்தால் கொஞ்சமாவது அமுங்கும். ஆனால் ஃபார்மலின் கலந்த மீன்களை அழுத்தி பார்த்தால் கம்பிபோல் உறுதியாக இருக்கும்.
செதில்கள் கருப்பாக இருந்தால் கெட்டு போன மீன். செதில்கள் கெடாமல் சிவப்பாக இருக்க பார்மலின் பயன்படுத்தப்படுகிறது.
ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை சாதாரணமாக கண்டறிய முடியாது. "ஃபார்மலின் ரீஜென்ட் டெஸ்ட் கிட்" மூலம் இதைக் கண்டறியலாம்.
இந்த டெஸ்ட் கிட்டில் 100 டெஸ்டுகள் எடுக்கலாம். இதனை நாம் வீட்டில் வைத்தும் டெஸ்ட் செய்யலாம்.
வாங்கி வந்த மீன் மீது ஃபார்மலின் ரீ ஏஜெண்ட் டெஸ்ட் கிட்' கெமிக்கலை ஒரு சொட்டு ஊற்றினால் ஃபார்மலின் கலந்திருந்தால் அதிகப்பட்சம் 2 நிமிடங்களில் ரோஸ் கலரில் மாறிவிடும்.
இப்படி ஃபார்மலின் கலந்த உணவுகளை உட்கொண்டால் கண் எரிச்சல், தோல் அரிப்பு, தொண்டை கரகரப்பு, வயிற்றுப் புண், சிறுநீரகப் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஃபார்மலின் கலந்த மீன்களை வருடக்கணக்கில் சாப்பிடுவதால், ரத்தப் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.