Tap to Read ➤

மேற்கத்திய கழிப்பறையை ஏன் பயன்படுத்தக்கூடாது?

இந்தியன் டாய்லெட்டை உபயோகிக்க மருத்துவர்கள் பரிந்துரை !!
Sidhanathan K
இன்றைய காலகட்டத்தில் நாகரீகம் என்ற பெயரில் நம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். அதில் ஒன்றுதான் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் வெஸ்டர்ன் டாய்லெட்.
வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் உட்காருவதற்கு வசதியாக இருந்தாலும் உடலுக்கு தீமையே தருகிறது.
இந்தியக் கழிவறையில் அமர்ந்து கொள்வது நமது முழு உடலுக்கும் ஒரு உடற்பயிற்சி என்று கூறப்படுகிறது.
அதனால்தான் சாதாரணமாக கால் மூட்டுகளை மடக்கி அமர்ந்து மலம் கழிப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
கால் மூட்டுகளை மடக்கி அமரும்போது இடுப்பு எலும்புகள் வலுப்பெறும், தசைகள் பலப்படுத்தப்படுகிறது.
இந்தியக் கழிவறையில் அமரும் போது, வயிற்றின் அழுத்தத்தால் மலக்குடலில் உள்ள மலம் முழுமையாக வெளியேறும்.
இந்தியக் கழிப்பறைகளை விட வெஸ்டர்ன் டாய்லெட்டுகளுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்திய கழிப்பறை ஒரு தீர்வாக உள்ளது.
இந்தியக் கழிவறையைப் பயன்படுத்துவதன் மூலம் மலச்சிக்கல், குடல் அழற்சி, குடல் புற்றுநோய் போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் தடுக்கப்படுகின்றன.
வயதானவர்கள் மற்றும் கடுமையான மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தலாம்.
அவ்வாறு வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தும் சூழலில் முக்கால் அடி பெஞ்ச் மீது கால் வைத்து உட்காரலாம்.