Tap to Read ➤

வீட்டுச் செலவை குறைக்க சில எளிய டிப்ஸ்!

வீட்டில் சிக்கனமாக செலவு செய்தால் கஷ்டத்தில் இருந்து மீளலாம்.
HTML Tamil
விண்ணை முட்டும் விலைவாசியை சமாளிக்க முடியால் திணறுபவர்கள், சிக்கன நடவடிக்கையை கடைப்பிடித்தால், வீட்டில் கஷ்டமும் குறையும், சேமிப்பும் உயரும்.
சூப்பர் மார்க்கெட்டுகளுக்குச் செல்லாமல், கடைவீதியில் உள்ள மளிகைக் கடைகளில், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம்.
வீட்டில் ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை ஆப் செய்து மின் கட்டணத்தை சேமிக்கலாம்.
மின்சாரத்தை அதிகம் இழுக்கும் குண்டு பல்புகளை பயன்படுத்தாமல், சி.எஃப்.எல். வகை பல்புகளை மாற்றி மின்சாரத்தை சேமிக்கலாம்.
அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அதுபோன்ற உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து உண்ணலாம். இதன்மூலம் பணத்தை சேமிக்கலாம்.
தூக்கம், அரட்டை போன்றவற்றில் நேரத்தை வீணடிக்காமல், புதிய தொழில் கற்றுக் கொள்ளுதல், பகுதி நேர வேலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கலாம்.
புகைப் பிடித்தல், குடிப்பழக்கத்தை கைவிட முயலுங்கள். இதனால் உடல்நலம் பாதிக்காமல் இருப்பதோடு, பணம் விரயம் ஆவதும் தடுக்கப்படும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு தனித்தனியே செல்ஃபோன்கள் இருப்பதால், குறைந்த செலவில் சிக்கனமான பேக்கேஜுகளை தேர்வு செய்து ரீஜார்ஜ் செய்யலாம். லேண்ட் லைன் தொலைபேசி இணைப்பை துண்டிக்கலாம்.
பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தால், வண்டிகை ஆப் செய்யலாம். மேலும், வாகனங்களை முறையாக பாரமரித்து எரிபொருளை சேமிக்கலாம்.
குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதால் ஒரே நாளில் அதிகப்படியான செலவு ஏற்படுகிறது. இதனை தவிர்த்து, வீட்டு டிவியில் படங்களை பார்த்து, பணத்தை சேமிக்கலாம்.
கேஸ் அடுப்பை முறையாக பராமரித்து வந்தால் கேஸ் கணிசமாக மிச்சமாகும். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்து வந்தால் எரிபொருள் மிச்சமாகும்.