Tap to Read ➤

வீட்டு வைத்தியம் மூலம் சளி மற்றும் இருமலை எவ்வாறு குணப்படுத்துவது?

பருவநிலை மாற்றத்தால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்நன.
HTML Tamil
மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் சீதோஷண நிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் வந்து நம்மை திணறடிக்கும்.
இத்தகைய காலங்களில், சளி, இருமலை இயற்கையான முறையில், வீட்டு வைத்தியம் மூலம் எவ்வாறு குணமாக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இஞ்சி

இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்து வாயில் போட்டு மென்று வந்தால், சளி, இருமல் தொல்லை குணமாகும்.
உப்புநீர்

தொண்டை வலியால் அவதிப்படுவோர் வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளித்தால், தொண்டை உறுத்தல் நீங்கும். சளியையும் குறைக்கும்.
பூண்டு

 5 பூண்டு பற்களை, ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிடலாம். பூண்டை நசுக்கி எடுத்து சூப்பில் போட்டு அருந்தலாம்.
மிளகு

ஒரு கப் சுடுநீரில் 2 டேபிள் ஸ்பூன் தேனையும், சிறிது மிளகையும் சேர்த்து மூடி வைத்து, 15 நிமிடங்களுக்கு பின் குடித்தால் குணமாகும்.
மஞ்சள் பால்

சளித் தொல்லையால் பாதிக்கப்படுவோர், சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம். மஞ்சள் பால் சளியை போக்கும் திறன்கொண்டது.
துளசி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட துளசி இலைகளை சாறு பிழிந்து, அத்துடன் தேன் கலந்து குடித்தால் சளி மற்றும் ஜலதோஷம் குணமாகும்.
கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து, தேன் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சளி, இருமல், தொண்டைப் பிரச்சனை குணமாகும்.
சீரகம்

தண்ணீரில் சீரகத்தை கொதிக்க வைத்து குடித்து வந்தால், சுவாசக்குழாயில் உள்ள கிருமிகள் அழிந்து, சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிப்பது மிகவும் நல்லது. இதனால் குடிநீர் மூலம் தொற்றுக்கள் பரவுவது தடுக்கப்படும்.