Tap to Read ➤

ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை எப்படி கண்டறிவது ?

தவறுகள் நடக்காமல் இருக்க ஆதார் எண்ணை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள்!!
Sidhanathan K
இன்று இந்தியாவில் உள்ள மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றான ஆதார், 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணைக் கொண்டுள்ளது.
வங்கிகள், வருமான வரி தாக்கல், மானிய சலுகைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பல முக்கிய அம்சங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அரசு திட்டங்களை பெற வேண்டுமெனில் அதற்கும் ஆதார் அவசியமானதாக உள்ளது.
இவ்வாறு பல சமயங்களில் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படும் ஆதாரை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.
பான் எண் மற்றும் ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி ஜிஎஸ்டியை உருவாக்கி பல இடங்களில் முறைகேடுகள் நடந்து வருகிறது.
https://resident.uidai.gov.in/aadhaar-auth-history என்ற பக்கத்திற்கு சென்று 12 இலக்க ஆதார் நம்பரை கொடுத்து, அதன் பிறகு கீழாக கேப்சா கோடினை கொடுத்து சென்ட் ஓடிபி-யை கிளிக் செய்யவும்.
Go to link
ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். OTP-ஐ உள்ளிட்டு எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரையில் பார்க்க வேண்டும் என்ற ஆப்சன் இருக்கும்.
அடுத்த பக்கத்தில் ஆதாரை பயன்படுத்திய பரிவர்த்தனை விவரங்கள் இருக்கும். அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதனை ஆறு மாதங்களுக்கு மட்டுமே பார்க்க முடியும் என்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பார்ப்பது நல்லது.
நம்முடைய ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறது என நினைத்தால் https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock என்ற பக்கத்திற்கு சென்று ஆதாரை லாக் செய்து கொள்ளலாம்.
Click here
இப்பக்கத்தில் ஆதார் எண், Security Code, பெயர், பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்து Send OTP என்பதைக் கிளிக் வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி-யை டைப் செய்து Login செய்வதன் மூலம் லாக் செய்யலாம்.
அவ்வாறு லாக் செய்யப்பட்ட ஆதாரை எந்த இடத்திலும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடதக்கது.
தேவையானபோது மேற்கொண்ட படிகளின் வழியாக லாக் செய்த ஆதாரை ஆக்டிவேட் (Activate) செய்து கொள்ளலாம்.