Tap to Read ➤

இயற்கை முறையில் நரை முடியை சரி செய்வது எப்படி?

வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே நரை முடியை இயற்கையாக கருப்பாக்கலாம்.
HTML Tamil
ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே முடிகள் நரைக்க தொடங்கி விடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
வெள்ளை முடியை சரிசெய்ய ஹேர் டை அல்லது கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
இந்த செயற்கையான ஹேர் டை உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால், முடிக்கு தீங்கு விளைவிக்கும்.
முடியை பாதுகாக்க, இயற்கையான முறையில் நரை முடியை கருமையாக்குவதே மிகவும் நல்லது.
இளம் வயது நரை முடியை மாற்ற கரிசலாங்கண்ணி இலையின் பொடியை தேனில் கலந்து, தினமும் அரைக்கரண்டி சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
இளம் நரை முடி மறைய நெல்லிக்காய், நெல்லிக்காய் வற்றலை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
நரை முடி கருப்பாக மூக்கிறட்டை மூலிகையை பாலில் அரைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முடி கருப்பாக கற்றாளைச் சாறு, நெல்லிக்காய் சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தடவி வரலாம்.
நரை முடி கருப்பாக முளைக்கீரையை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
முடி நரைக்காமல் வளர எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் ஆகியவற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி, தலை முடியில் தேய்த்து வரலாம்.
கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், கறிவேப்பிலையை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.