Tap to Read ➤

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு

இயற்கை முறையில் நீண்ட முடி வளர இதோ சில எளிய வழிமுறைகள்
varalakshmi n
சுவை இல்லாத முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எவ்வளவு நன்மை பாருங்கள்
பாதிப்படைந்த வேர்க்கால்களை சரிசெய்யும் குணம் முட்டையின் வெள்ளைக்கருவிற்கு உள்ளது. முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்,வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்
ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் வேர்க்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்
முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. உருளைக்கிழங்கிலும் முட்டையிலும் அதிக புரோட்டீன் உள்ளது. எனவே உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்
வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்
நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்து வந்தால் முடியின் அடர்த்தியை அதிகரிக்கலாம்
வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்
சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடிஉதிர்வை தீர்வுக்கு கொண்டுவரலாம்
மேலும் வறட்சியின் போது சிலருக்கு தலைமுடியில் பொடுகு காணப்படும்
தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடுசெய்து மிதமான சூட்டில் காட்டன் பஞ்சு கொண்டு அதன் வேர்க்கால்கள் முதல் தேய்த்து பின்பு 10நிமிடங்கள் கழித்து குளிப்பது பொடுகுக்கு நல்ல தீர்வாகும். மேலும் தேங்காய் எண்ணெய்யுடன் செம்பருத்தி பூ , மருதாணி ,கறிவேப்பிலை , நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்து தேய்ப்பதன் மூலம் முடி நன்கு வளரும்