மூட்டைப் பூச்சிகளை விரட்ட அட்டகாசமான சில வழிகள்..!!
Sidhanathan K
நாம் உறங்கும் கட்டிலை சுற்றி தான் மூட்டை பூச்சி இருக்கும். ஏனென்றால் இதன் உணவு நமது இரத்தம் தான்.
இந்த மூட்டை பூச்சிகள் இரவு நேரங்களில் தான் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும்.
மூட்டை பூச்சிகள் கடிப்பதால் சரும அலற்சி, சரும தடிப்பு போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
சிவப்பு மிளகாய் பொடி சிறந்த மூட்டைப்பூச்சி விரட்டியாக அமைந்துள்ளது. இந்த பொடியை பூச்சிகள் ஒழிந்திருக்கும் இடங்களில் தூவவும்.
கிராம்பு எண்ணெயுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி பூச்சிகள் பரவியுள்ள இடத்தில் ஸ்பிரே செய்யவும்.
வேப்பெண்ணெய்யுடன் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1/2 டீ ஸ்பூன் அளவு சோப்பு எடுத்து கலந்து கொள்ளவும். பிறகு அதை பூச்சிகள் உள்ள இடங்களில் ஸ்பிரே செய்யுவும்.
கொஞ்சம் புதினா இலைகளை எடுத்து, நீங்கள் தூங்கும் பகுதியிலும், குழந்தை தூங்கும் தொட்டிலிலும் வைத்து கொள்ளவும்.
தண்ணீரில் லாவண்டர் எண்ணெய்யை கலந்து, நன்றாக குலுக்கி விட்டு அதை பூச்சிகள் பரவியுள்ள இடத்தில் ஸ்பிரே செய்யவும்.
ரோஸ்மேரியுடன் யூகாப்லிட்டஸ் ஆயில் சேர்த்து நன்றாக குலுக்கி, பூச்சிகள் உள்ள இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஸ்பிரே செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
ஆரஞ்சு எண்ணெயுடன் தண்ணீர் சேர்த்து கலந்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து கொண்டு, பூச்சிகள் இருக்கின்ற இடத்தில் ஸ்பிரே செய்யவும்.