Tap to Read ➤

இஞ்சியை எப்படி சாப்பிட்டால் நற்பலன்கள் கிடைக்கும்?

இஞ்சி அற்புத மருத்துவ குணங்கள் கொண்டது
HTML Tamil
பல்வேறு அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள இஞ்சி, நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
இஞ்சியை எதனுடன் சேர்த்து  சாப்பிட்டால் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இஞ்சி சாற்றை பாலில் கலந்து சாப்பிட்டால் வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்
இஞ்சி துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிட்டால் களைப்பு, மார்பு வலி குணமாகும்.
இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
இஞ்சி சாற்றுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால், வாதக் கோளாறு நீங்கும்.
எலுமிச்சை சாற்றுடன் இஞ்சி சாற்றை கலந்து சாப்பிட்டால் பசி ஏற்படும். இஞ்சியை மிளகுடன் அரைத்து சாப்பிட்டால் ஜீரணமாகும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டால், பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் சரியாகும்.
காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் பித்த தலைச்சுற்று சரியாகும்.
இஞ்சி, எலுமிச்சை, வெங்காயம் மூன்றையும் சாறெடுத்து, அரை அவுன்ஸ் சாப்பிட்டால் ஆரம்பகால ஆஸ்துமா, இருமல் குணமாகும்.