Tap to Read ➤

இரட்டைக் குழந்தைகள் பெற எந்த உணவுகளை உண்டால் வாய்ப்பு?

இரட்டைக் குழந்தைகள் பிறக்க ஆசைப்படும் பெண்கள் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
HTML Tamil
திருமணமான 4 மாதங்களிலேயே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பும் கர்ப்பிணிகள், என்னென்ன  உணவுகளை உண்ணலாம்  என்பதை பார்ப்போம்.
கர்ப்பிணிப் பெண்கள் நல்ல ஊட்டசத்து மிக்க உணவுகளை உண்டால் இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் பால், வெண்ணெய் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை உண்பதால் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிக அளவு பால் பொருட்களை உண்ணும் பெண்களுக்கே பெரும்பாலும் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணிப் பெண்கள் பால் பொருட்களை உண்டால், இரட்டை குழந்தைகள் பிறக்க வைப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
இரட்டைக் குழந்தைகள் உண்டாக, கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளான தானிய வகைகள், பீன்ஸ், பீட்ரூட் மற்றும் கீரைகள் மிகவும் சிறந்த உணவுகள் ஆகும்.
இத்தகைய உணவுகள், கருமுட்டையின் அளவை அதிகரிப்பதோடு, நரப்புக் குழாயில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்டது.
கருவுற்ற பெண்கள் அதிக அளவில் கிழங்கு வகைகளை சாப்பிட்டு வந்தால் இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளது.
கிழங்கு வகைகளில் அதிக அளவில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் இருப்பதால், கருப்பையில் அதிகமாக முட்டையை தங்க வைக்க முடியும்.
இத்தகைய உணவுகளை சாப்பிட்டால் கண்டிப்பாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.