Tap to Read ➤

ஆன்லைன் ஷாப்பிங்கை கவனமுடன் கையாள்வது எப்படி?

ஆன்லைன் ஷாப்பிங்கில் சிறு தவறு நடந்தாலும் பணத்தை இழக்க நேரிடும்.
HTML Tamil
ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்போது டிரெண்டாகி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங், வழக்கத்தை விட அதிகமாக நடைபெற்று வருகிறது
இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆன்லைன் ஷாப்பிங்கில் போலி வலைதளங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் பணம் ஏமாற்றப்பட அதிகம் வாய்ப்புள்ளது
ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன்பு அந்த இணையதளங்கள் உண்மையானதா? என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது.
ஆன்லைனில் எந்த இணையதளத்தில் ஆர்டர் செய்தாலும், பொருட்கள் டெலிவரிக்கு  வந்த பின்னர்  பணம் கொடுப்பதே சிறந்தது.
சலுகைகளை பெற ஆன்லைனில் முன்கூட்டியே பணம் செலுத்தினால் மோசடி கும்பலிடம் பணத்தை இழக்க நேரிடும்.
பண்டிகை காலங்களில் வாட்ஸ் அப் மற்றும் இமெயிலில் அறிவிக்கப்படும்  கவர்ச்சிகரமான ஆஃபர்களை கண்டு
ஏமாற வேண்டாம்.
பிரபல நிறுவனங்களின் பெயரில் உருவாக்கப்படும் போலி இணையதள லிங்கை கிளிக் செய்தால், வங்கிக் கணக்கின்  தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.
பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம்.