Tap to Read ➤

தீபாவளியில் விளக்கேற்றும் வழிமுறைகள்!

தீபாவளியன்று விளக்கு ஏற்றும்போது செய்ய வேண்டியவை குறித்து பார்பபோம்.
HTML Tamil
வீடுகள் மற்றும் பூஜை அறையை அலங்கரித்து, விளக்கேற்றி வழிபட்டு, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுகிறோம்.
ஒளிமயமான தீபாவளி திருநாளில், வீட்டில் விளக்கேற்றி வழிபாட்டால், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தீபாவளி தினத்தில் தீபங்கள் ஏற்றுவதால், வீட்டிலும், நம் மனதிலும் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அகலும்.
விளக்கேற்றுவதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் தோன்றி, நல்ல நிகழ்வுகள் வீட்டுக்குள்ளும், மனதிலும் நுழையும் என்பது நம்பிக்கை.
தீபாவளி அன்று முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். பின்னர், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.
செல்வ வளம் பெருகி, வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைய கிழக்கு அல்லது வடகிழக்கு பார்த்தபடி விளக்கேற்றுவது நல்லது.
இவ்வாறு ஏற்றினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அகன்று, செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.
பித்தளை அல்லது மண்ணால் ஆன விளக்குகளை ஏற்றி வைத்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பசும் நெய் ஊற்றி விளக்கேற்றினால், வீட்டிற்குள் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.
நெய் விளக்கு ஏற்ற முடியாவிட்டால், வீட்டில் நல்லெண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது நல்லது.