Tap to Read ➤

ரேஷன் அட்டைதாரர்களே இதை செய்ய மறக்காதீர்கள்!

How to link ration card and aadhar card for one nation one ration
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கக் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களிடம் சென்றடைய 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' தொடங்கப்பட்டது.
இதற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டியது கட்டாயம்.
இதற்கு கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்த நிலையில், இப்போது காலக்கெடு ஜூன் 30ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான ஆவணங்கள் -ரேஷன் கார்டு, போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தகவல்கள்.
முதலில் uidai.gov.in என்ற தளத்திற்குச் சென்று, அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அதில் கேட்கப்பட்டுள்ள முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்களைச் சரியாக நிரப்ப வேண்டும்.
பின்பு ‘ration card benefit' ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.
மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ தளத்தில் நிரப்பி சமர்பித்தால், ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது முடிந்துவிடும்.