Tap to Read ➤

வீட்டில் உள்ள பொருட்களை பாராமரிக்க சில பயனுள்ள டிப்ஸ்!

வீட்டுப் பொருட்களை பராமரிப்பதற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.
HTML Tamil
அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்களை எளிய முறையில் பராமரிக்கும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.
கதவு, ஜன்னல்களை துடைக்கும்போது, ஒரு கரண்டி வினிகரில், 3 கரண்டி தண்ணீரை சேர்த்து துடைத்தால். பளிச்சென்று அழகாக இருக்கும்.
வீட்டில் உள்ள தரையை துடைக்கும்போது, 2 ஸ்பூன் உப்பைப் போட்டு துடைத்தால், ஈக்கள் தொந்தரவு குறையும்.
கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய, ஒரு கப் வெந்நீரில் எலுமிச்சை பழத்தை கலந்து அழுத்தி துடைத்தால், கேஸ் ஸ்டவ்வில் உள்ள கறைகள் சுத்தமாகும்.
ஆடையில் ஏற்படும் கறைகளை போக்க, வெதுவெதுப்பான பாலில், அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் சோப்பு போட்டு அலசினால் கறை மறைந்துவிடும்.
பட்டுச் சேலையை துவைக்கும்போது, நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து கொண்டால் சாயம் போகாமல், பட்டுச் சேலையும் பளிச்சென்று இருக்கும்.
பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து, பின்னர் சுத்தம் செய்தால், புத்தம் புதிய நகைகள் போல் ஜொலிக்கும்.
வீட்டில் பூஜை செய்வதற்கு முன்பாக, ஊதிபத்தியை நீரில் நனைத்து காய்ந்த பின்னர் ஏற்றி வைத்தால், நல்ல மணமாக இருக்கும்.
மிக்ஸி, கிரைண்டரை சுத்தம் செய்யும்போது, பழைய டூத் பிரஷில், டூத் பேஸ்ட் வைத்து தேய்த்து கழுவினால், புதிதுபோல் பளிச்சென இருக்கும்.