முருங்கைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ள காய்கறியாகும். இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதால் அடிக்கடி சமையலில் பயன்படுத்தப்படுகிறது
சுவைமிகு முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – ½ கப், முருங்கைக்காய் – 5, உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன், சீரகம் – ½ ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தேங்காய் துருவல் – ½ கப், அரிசி – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – ¾ ஸ்பூன், எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
செய்முறை: முதலில் பாசிப்பருப்பை தனியாக வேகவைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீரில் வேகவைக்கவும்
உளுத்தம்பருப்பை லேசாக பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த பருப்பு, சீரகம், பச்சைமிளகாய் தேங்காய் துருவல் அரிசி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக்ள்ளவும்
வெந்த முருங்கைக்காய் துண்டுகளுடன் அரைத்த மசாலா, வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 5-7 நிமிடம் கொதிக்க விடவும்
கூட்டு பதம் வந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சேர்க்கவும். சுவையான முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு ரெடி