அன்றாடம் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாகும்
இதில் உள்ள வைட்டமின் ஈ, மற்றும் செலினியம், நார்சத்து புற்றுநோய் அபாயத்தை தடுக்கின்றது
பால் பிடிக்காதவர்கள், கோதுமை சப்பாத்தி, கோதுமை களி அல்லது பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம், இது தேவையற்ற கொழுப்பின் அளவினை குறைக்க உதவுகின்றது
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று கோதுமை களி, அதன் செய்முறையை இங்கே காணலாம்
கோதுமை மாவு 1 கப், வெல்லம் 1.1/2 கப், சிறிதளவு முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், நெய்
கோதுமை மாவை கடாயில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும்
நீராவியில் வேக வைத்து எடுத்து, அதனை உதிர்த்து கொள்ளவேண்டும்
வெல்லப்பாகு நல்ல பதத்திற்கு வந்தவுடன், வறுத்த கோதுமையை அதில் சேர்த்து கிளற வேண்டும்
2 டேபிள்ஸ்பூன் அளவு நெய்யில் முந்திரி, திராட்சை ஏலக்காய் சேர்த்து கலக்கி இறக்க வேண்டும்