AI-IMAGE
சுவையும் சத்தும் நிறைந்த பன்னீர் பரோட்டா, காலை உணவு அல்லது இரவு உணவிற்கு ஏற்ற சிறந்த வடஇந்திய உணவாகும்.
எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே இந்த சுவையான பன்னீர் பரோட்டாவை தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்: பிசைந்த கோதுமை மாவு – 500 கிராம், பன்னீர் – 150 கிராம் (துருவியது), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – 5 கிராம் (நறுக்கியது), பூண்டு – 5 கிராம் (நறுக்கியது),
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது), மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பன்னீரைத் துருவி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் துருவிய பன்னீர், கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பிசைந்த கோதுமை மாவை சிறு உருண்டைகளாகப் பிரித்து, நடுவில் பன்னீர் கலவையை வைத்து நன்றாக மூடவும்.
அதனை மெதுவாக பரோட்டாவாகத் தேய்த்து விரிக்கவும். சூடான தோசைக்கல்லில் வைத்து, சிறிதளவு எண்ணெய் தடவி இருபுறமும் பொன்னிறமாக வேகவிடவும். இதேபோல் அனைத்து பரோட்டாக்களையும் தயாரிக்கவும்.
சூடாக இருக்கும் பன்னீர் பரோட்டாவை கெட்டியான தயிர், ஊறுகாய் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறினால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.வீட்டிலேயே எளிதாக செய்து குடும்பத்தினருடன் ருசித்து மகிழுங்கள்!