Tap to Read ➤

ஆலயத்தில் இறைவனை வழிபடும் முறைகள்

கோவில்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இனைவனை வழிபட்டு வருவது நல்லது.
HTML Tamil
செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, மாதம் மற்றும் வருட பிறப்பு, சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களிலும் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.
கோவில் வாயிலில் நுழையம் முன் தண்ணீரால் கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும்.
கோவிலின் பிரதான வாசல் வழியேதான் உள்ளே செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக்கூடாது.
கோவிலுக்குள் நுழையும் போதும், திரும்பி வெளியே வரும்போதும் கோபுரத்தை தலைக்குமேல் கைகளை தூக்கி வணங்க வேண்டும்.
கோவிலுக்குச் செல்லும்போது பூ, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வது மிகவும் நல்லது.
முதலில் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும். 3 கொட்டுகளைப் போட்டு, 3 தோப்புக்கரணம் போட்டு வழிபட வேண்டும்.
கோவிலுக்குச் சென்று இறைவனை பார்த்து வழிபடும்போது, கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
மூலவருக்கான அபிஷேகத்தை பார்த்தால், அலங்காரத்தையும், தீப ஆராதனையும் பார்த்து விட்டுத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
ஆலயத்திற்குள் சென்று பிறரிடம் பேசாமல் இறைவனை மட்டும் மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
கோயிலில் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.
கோயிலில் உள்ள மற்ற சன்னதிகளை விட, கொடி மரத்தின் அருகே மட்டும் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
கோவிலுக்குச் சென்று விட்டு நேராக வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் கால்களை கழுவக்கூடாது.