Tap to Read ➤

மார்பகப் புற்றுநோயை வருமுன் காப்பது எப்படி?

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்தால் அதிலிருந்து விடுபடலாம்.
HTML Tamil
புற்று நோய் பற்றிய தெளிவு நமக்கு முன்கூட்டியே இருந்தால், நோய் ஏற்படாமல் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மார்புக்குள் உள்ள சுரப்பிகளில் உள்ள செல்கள், அசாதாரண முறையில் பெரிதாகி கட்டியாக உருமாறுவதே மார்பகப் புற்றுநோய் ஆகும்.
ஆண்களை விட பெண்களுக்கே மார்பக புற்று நோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், 20 வயதிலிருந்தே மார்பகப் புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
40 முதல் 50 வயது வரையிலான பெண்களின் உடலில் ஏற்படும் அதிகப்படியான ஹார்மோன் மாறுபாடுகளால், புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது.
பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சீரற்ற நிலையில் இருக்கும்போது மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்து உண்டாகும்
இதனை ஆரம்பத்திலேயே கண்டுபித்து, சிசுக்களை அளித்துவிட்டால், மற்ற இடங்களுக்கு பரவால் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உடற்பயிற்சி செய்வது, அதிகம் காரம் சேர்ந்த உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மார்பகப் புற்றுநோயில் இருந்து தற்காத்துக்கொள்ள பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படாமலிருக்க சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
மார்பகப் புற்றுநோயை வரும்முன் காக்க, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாதம் ஒருமுறை மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
கண்ணாடி முன் நின்று, தலைக்கு மேலே கைகளை உயர்த்தி, ஏதேனும் மாற்றங்கள் தெரிகின்றதா என்பதை கவனிப்பது அவசியமாகும்.