ஜிம்மிற்கு சென்று தினமும் வொர்க் அவுட் செய்வதால் உடல் தசைகளில் வலி (Soreness) ஏற்படுகிறது. ஆனால் அந்த வலி உடற்பயிற்சி செய்யும்போது இல்லாமல் ஒருநாள் கழித்து வரும். அதை தாமதமான தசை வலி (Delayed Onset Muscle Soreness (DOMS) என்கிறார்கள்.
ஆனால் ஏதேனும் அடி பட்டு உண்டாகும் வலியை உடனே உணரமுடியும். இவை இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்த பிறகும் சரியான சாப்பாடு மற்றும் முறையான தூக்கம் அவசியம். அப்படி முதல்நாள் சரியாக சாப்பிடாவிட்டாலோ, தூங்காவிட்டாலோ மறுநாள் வொர்க் அவுட் செய்ய வேண்டாம். அது வலியை மேலும் அதிகரிக்கும்.
அதேபோல ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன செய்திகள் சமூக வலைதளங்களில் நிறைய பார்த்திருப்போம்.
அப்படியான நெஞ்சுவலி, மாரடைப்புக்கான அறிகுறியெல்லாம் திடீரென ஒரே நாளில் வருவதில்லை. பல நாள்களாக சரியான சாப்பாடு, போதுமான தூக்கம் இல்லாமல் கடுமையாக உடற்பயிற்சி செய்தால் ஒருநாள் அதற்கான அறிகுறியை காட்டும்.
ஆனால் ஜிம் வொர்க் அவுட்டிற்கு பிறகு உண்டாகும் வலி தசை வளர்ச்சிக்கான சரியான வொர்க் அவுட் கொடுத்ததற்கான அறிகுறியாகும்.
வொர்க்அவுட்டை தொடங்குவதற்கு முன் எப்போதும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஸ்ட்ரெட்சிங் (stretching exercises) செய்யுங்கள். இது தசைகளுக்கு சரியான இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு, உடற்பயிற்சியின் போது வலி நிவாரணம் மற்றும் மீட்புக்கு உதவுகிறது.
அதேபோல் வொர்க்அவுட்டை முடித்த பிறகும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஸ்ட்ரெட்சிங் (stretching exercises) செய்யலாம். இதுவும் DOMS வலியை குறைக்கும்.
கடுமையான வலியை உணரும்போது ஐஸ் பேக் பயன்படுத்தலாம் அல்லது ஐஸ் குளியல் (ICE BATH) எடுக்கலாம். இது உடல் வலியை குறைக்கும்