Sidhanathan K       Jun 07, 2023

மீன் முள் தொண்டையில் சிக்கிவிட்டால் அகற்றுவது எப்படி..?

மீன் சாப்பிடும் போது நம்மில் பலருக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.

அவ்வாறு மீன் முள் சிக்கிக்கொண்டால், அதை உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையெனில் உணவுக்குழாயை கிழித்துவிடும் அபாயம் உள்ளது.

மீன்முள் தொண்டையில் சிக்கினால், கழுத்தில் சுருக்கென்ற வலி, உணவை இயல்பாக விழுங்க இயலாமை, சில சமயங்களில் இருமல், இருமலுடன் ரத்தம், தொண்டையில் அரிப்பு மற்றும் வலி ஏற்படலாம்.

சிறிய அளவிலான மீன் முள் மாட்டிக்கொண்டால் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் போதுமானது.

பெரிய வாழைப்பழ துண்டை கடித்து தொண்டையில் சிறிது நேரம் வைத்திருந்தால், வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளும் சேர்ந்து வயிற்றுக்குள் சென்றுவிடும்.

மீன் முள் தொண்டையில் மாட்டிக் கொண்டால் சாதத்தை உருட்டி முழுங்கினால், சாதத்துடன் மீன் முள்ளும் சேர்ந்து வயிற்றுக்குள் சென்றுவிடும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 ஸ்பூன் வினிகரை கலந்து 1 ஸ்பூன் எடுத்து குடிக்கலாம். சோடா குடிப்பதால் வயிற்றில் உள்ள மீன் முள் கரையும்.

பொதுவாக மீன் முள் தொண்டையில் இருக்கும்போது, அதிகப்படியாக இருமக்கூடாது.

இத்தனை முயற்சி செய்தும் தொண்டையில் முள் எடுக்க முடியாமல் போனால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories