Tap to Read ➤

உடலில் உள்ள மருக்களை எப்படி நீக்கலாம்?

மருக்களை எளிய முறையில் அடியோடு நீக்க முடியும்.
HTML Tamil
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருக்கள் உடலின் பல்வேறு பாகங்களில் உருவாகிறது.
மருக்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், முகம், கழுத்து போன்ற பகுதிகளிலும் பரவி, சங்கடத்தை உண்டாக்க வாய்ப்புண்டு.
மருக்களை எளிய முறையில் பாட்டி வைத்தியம் மூலம் அடியோடு நீக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.
அன்னாசிப்பழத்தை சிறிதாக வெட்டி, மருக்கள் இருக்கும் பகுதியில் தடவி வந்தால் மருக்கள் உதிர்ந்து விடும்.
பூண்டை நசுக்கி, அதன் சாற்றை மருக்கள் மீது தடவி, 30 நிமிடத்திற்குப் பின்னர் தண்ணீரில் கழுவி வந்தால், மருக்கள் காய்ந்து விழுந்துவிடும்.
முகத்தில் உள்ள பருக்களை நீக்க, வெங்காயத்துடன் பூண்டை சேர்த்து அரைத்து, அந்த சாற்றை மருக்கள் மீது தடவி, தண்ணீரில் கழுவினால் குணமாகும்.
அத்திப்பழத் தண்டுகளில் இருந்து சாறு எடுத்து, மருக்கள் மீது தொடர்ந்து தடவி வந்தால், மருக்கள் உதிர்ந்து விடும்.
விளக்கெண்ணையை மருக்கள் மீது தினமும் 2 முறை தடவி வந்தால், அந்தப் பகுதி மிருதுவாகி, மருக்கள் அகன்றுவிடும்.
வாழைப்பழத் தோலின் உட்பக்கத்தை, மருக்களின் மேல்பகுதியில் படுமாறு சுற்றி கட்டி வந்தால், மருக்கள் குணமாகும்.
பூண்டை அரைத்து, அத்துடன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து, இரவில் தூங்கும்போது மருக்கள் மீது தடவி வந்தால் உதிர்ந்துவிடும்.
இஞ்சியை அரைத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், மருக்கள் காய்ந்து உதிர்ந்து விடும்.
எலுமிச்சை சாற்றுடன், கற்றாலை ஜெல்லை சம அளவு சேர்த்து, மருக்கள் மீது படும்படி மசாஜ் செய்து வந்தால் மரு வலுவிழந்த உதிர்ந்து விடும்.