Tap to Read ➤

மொபைல் நம்பர் சேவ் செய்யாமல் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவது எப்படி..?

பிரௌசரின் மூலம் வாட்ஸ்அப் மெசேஜ் !!
Sidhanathan K
வாட்ஸாப்பில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் அவருடைய காண்டாக்ட் நம்பர் சேவ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் நம்பரை சேவ் செய்யாமல் வாட்ஸ்அப்பில் பிரௌசர் மூலம் மெசேஜ் அனுப்புவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகிள் குரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் பிரௌசரை ஓபன் செய்ய வேண்டும்.
பிறகு பிரௌசரில் http://wa.me/91xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்ய வேண்டும். xxxxxxxxxx என்ற இடத்தில் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த எண்ணை டைப் செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு எண் 9876543210 என்றிருந்தால் நாட்டின் குறியீடு எண் உடன் 919876543210 என்று டைப் செய்ய வேண்டும். (உ.ம்- http://wa.me/919876543210).
நாட்டின் குறியீடு (Code) இந்தியா என்பதால் 91 என்று கொடுத்துள்ளோம். அந்த குறியீடு எண் நாட்டுக்கு நாடு மாறுபடும்.
இப்போது வாட்ஸ்அப் ஸ்கீரின் பக்கத்திற்கு செல்லும். “Continue Chat” என்ற பச்சை நிற பட்டனை க்ளிக் செய்யவும்.
நம்பர் பதிவிட்ட வாட்ஸ்அப் சேட் ஓப்பன் ஆகி விடும். இப்போது அந்த நம்பருக்கு தகவலை டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.