கோடையில் இந்த வியர்வை தொல்லை அதிகமாக இருக்கும்.
வியர்வைக்கு வாசனை இல்லை. ஆனால் பாக்டீரியா சருமத்தின் மீது படிந்து காற்றில் உலரும் போது, ஏற்படும் வாசனையானது துர்நாற்றமாக உணரப்படுகிறது.
ஆரோக்கியமாக இருக்கவும், துர்நாற்றத்தை தவிர்க்கவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.
தினமும் இருமுறை குளிக்கவும்.
கிருமிகளை நீக்கும் சோப்பு வகைகளை பயன்படுத்தவும்.
குளித்தவுடன் அக்குளை நன்றாக துடைத்த பின்னர் ஆடை அணியவும்.
மாதத்திற்கு 2 முறை அல்லது குறைந்தது 1 முறையாவது அக்குள்களில் உள்ள முடிகளை அகற்றும் பழக்கம் அவசியம்.
இறுக்கமான ஆடைகளுக்கு பதிலாக தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.
தர்பூசணி உட்கோள்வதன் மூலம் நீர்ச்சத்தை அதிகரித்து வியர்வையை கட்டுப்படுத்துகிறது.
சந்தனத்தை நீர் அல்லது பன்னீரில் விட்டு குழைத்து தினமும் இரவில் அக்குளில் தடவலாம்.
இரவு குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் வராது.