Tap to Read ➤
ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்வது எப்படி? ஈஸி வழிகள் இதோ
How to update aadhaar card details: 10 easy methods
Oneindia Tamil
ஆதார் கார்டில் சில சேவைகளை ஆன்லைன் மூலமும், சிலவற்றை ஆப்லைனிலும் செய்யலாம்
உங்கள் போன் எண், இ மெயில் ஐடி, பயோ மெட்ரிக்ஸ் விவரங்களை நேரில் ஆப்லைனில் மட்டுமே மாற்ற முடியும்
இதற்கு அருகில் உள்ள ஆதார் அலுவலகம் சென்றால் போதும்
அங்கு உங்கள் விவரங்களை எடுத்து மாற்றங்களை செய்வார்கள், 1 வாரத்திற்குள் மாற்றம் செய்யப்படும்
உங்கள் பெயரில் சின்ன மாற்றம், பிறந்த தேதி, விலாசம், பாலினம், மொழி ஆகியவற்றை ஆன்லைனில் செய்ய முடியும்
இதற்கு நீங்கள் ஆதாரின் ssup.uidai.gov.in பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாக் இன் செய்ய வேண்டும்
இதற்கு பின் உங்கள் போன் எண்ணிற்கு வரும் ஓடிபியை வைத்து லாக் இன் செய்ய வேண்டும்
பின்னர் அதில் பெயரில் சின்ன மாற்றம், பிறந்த தேதி, விலாசம், பாலினம், மொழி ஆகியவற்றை ஆன்லைனில் செய்ய முடியும்
ஆன்லைன் மூலம் செய்யும் மாற்றங்களுக்கு தேவையான ஆவணங்களின் சாப்ட் காப்பி இருக்க வேண்டும்