Sidhanathan K       Feb 08, 2023

ஃபிரிட்ஜை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

ஃபிரிட்ஜை காற்றோட்டமான அறையில் மட்டுமே வைக்க வேண்டும்.

எர்த் கனெக்சன் கண்டிப்பாக கொடுத்திருக்க வேண்டும். மேலும் சரியான பவர் சப்லையில் மட்டுமே ஃபிரிட்ஜை உபயோகப்படுத்த வேண்டும்.

வெயில் படும் இடத்திலோ, அதிக வெப்பம் உள்ள இடத்திலோ ஃபிரிட்ஜை வைக்க கூடாது.

உணவை சூடாக இல்லாமல் குளிர்ந்த பின்னரே குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

மாதம் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஃப்ரிட்ஜை சுத்தம் செய்வது அவசியம்.

முதலில் செய்ய வேண்டியது கண்டென்சர் காயிலை சுத்தம் செய்வதுதான். கண்டென்சர் தூசுகளால் அடைத்து கொண்டிருந்தால் ஃபிரிட்ஜ்ஜின் ஆற்றல் குறைந்துவிடும்.

ஃபிரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக்கூடாது. அதேபோல் ஃபிரிட்ஜை சுற்றிலும் குறைந்தது 6 Inches இடைவெளி இருப்பது நல்லது.

காய்கறி ட்ரேயின் மீது ஒரு கனமான துணி விரித்து பச்சை காய்கறிகளை பாதுகாத்தால் காய்கறிகள் நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருக்கும்.

ஃப்ரீசரில் ஐஸ் கட்டினால் தெர்மோஸ்டாட் (Thermostat)-ஐ உடனடியாக மாற்ற வேண்டும். இல்லையெனில் கம்ப்ரசர் அதிக வெப்பமடைந்து பிரிட்ஜ் வெடித்துவிடும்.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வாட்டர் ஃபில்டரை மாற்றுவது அவசியம். இல்லையெனில் அழுக்குகள் தேங்கி நீர் அடைத்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

துர்நாற்றம் வீசாமல் இருக்க சில புதினா இலைகள் அல்லது எலுமிச்சை தோலை ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

அதிக ஸ்டார் உள்ள ஃபிரிட்ஜை வாங்கினால் மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தலாம்.