Tap to Read ➤

பொது இடங்களில் பாதுகாப்பாக வைஃபை பயன்படுத்துவது எப்படி?

இலவச WIFI-ஐ பாதுகாப்பாக பயன்படுத்த சில டிப்ஸ் ..!!
Sidhanathan K
இணையம் நம் வாழ்வின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது.
ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பெரும்பாலான பொது இடங்களில் வைஃபை நெட்வொர்க்குகள் இலவசமாகக் கிடைக்கின்றன.
அவை பாதுகாப்பாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை, பாதுகாப்பற்ற இணைப்புகள் மால்வேர் தாக்குதல்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
கிரெடிட்கார்டு தகவல்கள், பாஸ்வேடுகள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவை இத்தகைய இணைப்புகள் மூலம் திருடப்படுகின்றன.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பொது இடங்கள் அல்லது இலவச வைஃபை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அப்பொழுது தகவலை பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
நிறுவனத்தின் வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தும் போது, அது அவர்களுடையதுதானா என்பதை உறுதிசெய்யவும்.
VPN வசதியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தகவல்கள் "Encryption" செய்யப்படுவதால் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது.
ஆன்டி வைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்திருப்பது பாதுகாப்பை அதிகப்படுத்தும்.
ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி, லேப்டாப்பாக இருந்தாலும் சரி, அவற்றின் இயங்குதளத்தை (OS) அப்டேட் செய்வது அவசியம்.
தேவையற்ற பாப்-அப்கள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்ய வேண்டாம். தேவையற்ற போது வைஃபை வசதியை ஆஃப் செய்து வைக்கலாம்.
கணினியில் ஃபயர்வால் அமைப்பைச் செயல்படுத்துவதன் மூலம் அங்கீகரிக்கப்படாத தகவல்தொடர்புகளைத் தவிர்க்கலாம்.
பொது வைஃபையில் கிரெடிட் கார்டு மற்றும் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவைப்படும்போது two-factor authentication வசதியைப் பயன்படுத்தலாம்.