Tap to Read ➤

பிரௌசரில் சேவ் செய்த பாஸ்வேர்டை எவ்வாறு பார்ப்பது ?

எல்லா பிரௌசரிலும் தானாக நிரப்புவதற்கான (Auto fill) விருப்பம் ஏன் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?
Sidhanathan K
பேஸ்புக், ஜிமெயில், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களில் பலர் கணக்கு வைத்துள்ளோம்.
ஆனால் எல்லா பாஸ்வேர்டையும் நினைவில் வைக்க முடியாமல் மறந்துவிடுவோம்.
இதற்காக தான் ஆட்டோ பிள் வசதி அனைத்து பிரௌசர்களிலும் உள்ளது.
முதன்முறையாக சமூக ஊடக வலைத்தளங்களில் உள்நுழையும்போது பாஸ்வேர்டு சேவ் செய்துகொள்ளலாம் என்கிற நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும். சரி என்றால் பாஸ்வேர்டை எளிதாகச் சேமிக்கலாம்.
அடுத்த முறை லாகின் செய்யும்போது பிரௌசரில் உள்ள ஆட்டோ பிள் வசதியை கிளிக் செய்தால், நாம் சேமித்த லாகின் விவரங்களை தானாக நிரப்பும் (Auto Fill).
அவ்வாறு சேமித்த பாஸ்வேர்டுகளை பிரவுசரில் பார்க்கலாம்.
முதலில் நாம் பயன்படுத்தும் பிரவுசரை ஓபன் செய்து மேல் வலது மூலையில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு, இடதுபுறம் ஓரத்தில் உள்ள ஆட்டோ பிள் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
முதலில் இருக்கும் பாஸ்வேர்டு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
பிரவுசரில் ஸ்டோர் ஆகியிருக்கும் கணக்குகளின் பாஸ்வேர்ட் மறைக்கப்பட்ட நிலையில் இருக்கும்.
நமக்கு தெரிய வேண்டிய கணக்கின் பாஸ்வேர்டை காண, பாஸ்வேர்டு விசிபிளிட்டி (Eye) ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
இறுதியாக நாம் சேமித்து வைத்த கணக்குகளின் பாஸ்வேர்ட் திரையில் தோன்றும்.