மனித வாழ்வில் மொத்தம் 9 திசைகள் நடைபெறும் என ஜோதிடம் கூறுகிறது. அந்த 9 திசைகள் ஒருவருக்கு நடந்து முடிய 120 வருடங்கள் ஆகுமாம். அவை என்னென்ன திசைகள், அதன் காலம் மற்றும் பரிகாரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
சூரிய திசை - 6 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - சிவன். அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - செந்தாமரை. வில்வம் யோகம் - சூரிய நமஸ்காரம். வஸ்திரம் - ஆரஞ்சு நிற ஆடை. பரிகார நாள் - ஞாயிறு. தானம் - கோதுமை பண்டம்.
சந்திர திசை - 10 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - சக்தி அல்லது திருப்பதி. அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - வெள்ளை அல்லி, மல்லிகை. வஸ்திரம் - வெண்ணிற ஆடை. பரிகார நாள் - திங்கள். தானம் - பச்சரிசி, அன்னதானம்.
செவ்வாய் திசை - 7 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் – முருகன். அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் – செண்பகப்பூ. வஸ்திரம் - சிவப்பு நிற ஆடை. பரிகார நாள் – செவ்வாய். தானம் - துவரம் பருப்பு, செவ்வாழை.
ராகு திசை - 18 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - துர்கை. அர்ச்சனை மலர் - மந்தாரை, மஞ்சள் வஸ்திரம் - நீல ஆடை. பரிகார நாள் – சனி. தானம் - பூனைக்கு உணவு, மற்றும் கறுப்பு நிற உளுந்து தானம்.
குரு திசை - 16 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - திருச்செந்தூர் முருகன். அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - முல்லை, தங்க அரளி. வஸ்திரம் - மஞ்சள் நிற பட்டாடை. பரிகார நாள் – வியாழன். தானம் - கொண்டைகடலை, மஞ்சள் நிற வாழைப்பழம்.
சனி திசை - 19 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் – சாஸ்தா. மலர் - நீல நிற மலர்கள், கருங்குவளை. வஸ்திரம் - கறுப்பு வஸ்திரம். பரிகார நாள் – சனி. தானம் - காகத்திற்கு உணவு, ஏழைக்கு எள்ளு சாதம், நல்லெண்ணை தானம்.
புதன் திசை - 17 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - மகா விஷ்ணு. அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - துளசி. வஸ்திரம் - பச்சை ஆடை. பரிகார நாள் – புதன். தானம் - பச்சை பயிறு.
கேது திசை - 7 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - சாமுண்டி, விநாயகர், ஹனுமன். அர்ச்சனை மலர் – செவ்வல்லி. வஸ்திரம் - சிவப்பு நிறம். பரிகார நாள் - செவ்வாய் தானம் - நாய்களுக்கு உணவு, குதிரைக்கு கொள்ளு, சிவப்பு துணி தானம்.
சுக்ர திசை - 20 வருடங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - ஶ்ரீ ரங்கநாதர், மகாலட்சுமி. மலர் - வெண்தாமரை, வெள்ளைநிற பூ. வஸ்திரம் - வெண்ணிற பட்டு. பரிகார நாள் – வெள்ளி. தானம் - பச்சரிசி, தேங்காய், வெண் நிற மொச்சை.