Sidhanathan K       Sep 20, 2023

டிவி சீரியல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் எப்படி கணக்கிடப்படுகிறது..?

டிஆர்பி (Television Rating Point) ரேட்டிங் என்பது ஒரு தொலைக்காட்சியின் தரத்தை நிர்ணயிப்பதாகும்.

மக்கள் எந்தச் சேனலில், எந்த நிகழ்ச்சியை அதிகநேரம் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய இந்த TRP பயன்படுகிறது.

ஒரு நிகழ்ச்சி/சீரியலின் TRP அடிப்படையில் தான் விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்வார்கள். இதன் மூலம் அந்த சேனலுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

இதனால்தான் இப்போது பல சேனல்கள் டிஆர்பியில் முன்னிலை வகிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன.

டிஆர்பி-ஐ கணக்கிட, BARC (Broadcast Audience Research Council) என்ற அமைப்பு “BAR-O-meters” என்ற கருவியை பயன்படுத்துகிறது.

இந்த BARC அமைப்பு சுமார் 50000-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொறுத்தப்படும் அந்த Peoples Meter-ஐ வைத்து, அதிலிருந்து பெறப்படும் தரவுகளை ஆய்வு செய்து டிவி நிகழ்ச்சிகளுக்கு புள்ளிகள் அடிப்படையில் ரேட்டிங்ஸ்களை வழங்குகிறது.

இப்படி ஒரு வாரம் முழுவதும் டிஆர்பி கணக்கிடப்பட்டு, அதன் முடிவு வாரம் ஒருமுறை வெளியிடப்படும்.

இந்த டிஆர்பி ரேட்டிங் மூலம் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்ய எவ்வளவு தொகை நிர்ணயம் செய்யலாம் என தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்கிறது.

மேலும் இந்த ரேட்டிங், கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியின், சில ஆயிரம் மாதிரிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், இது எப்போதும் சரியானதாக இருக்கும் என்று கூற முடியாது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories