Tap to Read ➤

உடம்புல இந்த அறிகுறி இருந்தா உடனடியா டாக்டர பாருங்க...!!

உடலில் ஏற்படும் சிறு அறிகுறிகளை அலட்சியம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்!!!
Sidhanathan K
பொதுவாக தலைவலி வந்தால் இது சாதாரண தலை வலி தான் என்று நாமே கொண்டு மருத்துவரிடம் செல்வதை தவிர்த்து விடுகிறோம்.
ஆனால் அனைத்து உடல்நல அறிகுறிகளையும் வீட்டிலிருந்து சமாளிக்க முயற்சித்தால், அது தற்காலிகமாக சரியாகிவிட்டாலும் பின்னர் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சொல்லப்போனால் அறுவை சிகிச்சை வரை கொண்டு போய் விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
கண் கோளாறுகள் கவனிக்க வேண்டிய ஒன்று. இதைத் சாதாரணமாக எண்ணிவிட்டால் கண்ணில் வீக்கம் அதிகரித்து பார்வையிழக்கும் நிலை ஏற்படலாம்.
குறிப்பாக, விழித்திரை பாதிப்பு மற்றும் கண் அழற்சி ஆகியவை 24-48 மணி நேரத்திற்குள் பார்க்க வில்லை என்றால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.
காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரிக்குப் போகாமல் வீட்டிலேயே கொஞ்சம் கஷாயம், மாத்திரைகள் சாப்பிட்டு சரி செய்து கொள்கிறோம். அதிகமான காய்ச்சல் ஏற்படும் போது அதை கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்ல.
கடுமையான உடற்பயிற்சி அல்லது வேலையின் போது மூச்சுத் திணறல் இயல்பானது. ஆனால் மூச்சுத் திணறல் சில நேரங்களில் இதய நோய்க்கான ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று இருதயநோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கண் பார்வை மங்கிப் போதலை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது நீரிழிவு நோய் அல்லது மல்டிபிள் ஸ்களீரோசிஸ் அறிகுறியாக இருக்கலாம்.
திடீரென தோன்றும் தோள்பட்டை வலி மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
மார்பில் ஏற்படும் அழுத்தம் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். எனவே நெஞ்சு இறுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்
எப்போதாவது இரட்டை பார்வையை அனுபவித்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும். ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
சிலருக்கு திடீரென உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பலவீனம் ஏற்படும். இது பக்கவாதத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்கிறார்கள் பிரபல மருத்துவ நிபுணர்கள்.
சிலருக்கு இரவில் தாங்க முடியாத கால் பிடிப்புகள் இருக்கும். அவை சில எலும்பு முறிவு அல்லது இரத்த உறைவுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
காரணமே இல்லாமல் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தால் அவை மாரடைப்பு, பெருநாடி சிதைவு, நுரையீரல் தக்கயடைப்பு மற்றும் அரித்மியா ஆகியவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.