Sidhanathan K       Dec 16, 2023

இளைய தளபதி விஜய்-யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

தளபதி விஜய் என செல்லமாக அழைக்கப்படும் ஜோசப் விஜய்-யின் சமீபத்தில் வெளியான லியோ படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை அள்ளியது.

அந்தவகையில், லோகேஷின் LCU ஜானர் படமான லியோ, பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு படத்திற்கும் 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். லியோ படத்திற்கு ரூ.120 கோடியும், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தளபதி68 படத்துக்கு ரூ.150 கோடியும் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சுமார் 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், சுமார் 1.30 கோடி மதிப்புடைய ஆடி ஏ 8 எல், 75 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சீரிஸ், 90 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ், 30 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட பல சொகுசு கார்களை வைத்துள்ளார்.

அதேபோல், விஜய் தனது தாய் ஷோபா, மகன் சஞ்சய் மற்றும் மனைவி சங்கீதா என ஒவ்வொருவர் பெயரிலும் 1 திருமண மண்டம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் சொத்து மதிப்பு 56 மில்லியனாக அதாவது இந்திய மதிப்பின் படி, ரூ.445 கோடியாக உள்ளதாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories