முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேறி உள்ளது.
கார்ப்பரேட் ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீடு ஒத்தி பத்திரங்கள் மற்றும் பொதுவான பத்திர விஷயங்களுக்கு 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பத்திரம் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இனி இந்த 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாக உயருகிறது.
அதேபோல் 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் உயருகிறது.
தற்போது முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பத்திரப்பதிவுக்கான செலவு கணிசமாக அதிகரிக்கும்.
வழிகாட்டி மதிப்பு தற்போதைய நிலத்தின் மதிப்புக்கு மாற்றினால், மேலும் பத்திரப்பதிவு கட்டணமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.