Tap to Read ➤

தமிழகத்தில் அதிகரித்துள்ள தற்கொலைகளும் விபத்துக்களும்!!

என்சிஆர்பி வெளியிட்டுள்ள அறிக்கை என்ன ?
Sidhanathan K
2021 NCRB தரவுகளின்படி, இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,64,033 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2020 உடன் ஒப்பிடும்போது இது 7.6% அதிகமாகும்.
2021ல் இந்திய சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 1,55,622 பேர் உயிரிழந்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் கிட்டத்தட்ட 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதிலும் இரு சக்கர வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில் தான் அதிகம்.
ஆய்வுகளின் படி, அதிகபட்ச சாலை விபத்துக்களில் இரு சக்கர வாகனங்கள் (69,240), கார்கள் (23,531) மற்றும் லாரிகள் (14,622) என்ற அளவில் இறப்புகள் நிகழ்ந்துள்ளது.
விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை உத்திரபிரதேசத்தில்தான் அதிகம்.
தமிழ்நாடு

சாலை விபத்து - 55682
உயிரிழப்புகள் - 15384
மத்திய பிரதேசம்

சாலை விபத்து - 48219
உயிரிழப்புகள் - 12480
உத்திர பிரதேசம்

சாலை விபத்து - 33711
உயிரிழப்புகள் - 21792
கர்நாடகா

சாலை விபத்து - 34647
உயிரிழப்புகள் - 10038
மஹாராஷ்டிரா

சாலை விபத்து - 26598
உயிரிழப்புகள் - 13911
ராஜஸ்தான்

சாலை விபத்து - 20954
உயிரிழப்புகள் - 10043