Tap to Read ➤

கர்ஜிக்கும் புலிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

புலிகள் உலகில் காணப்படும் மிகப்பெரிய பூனை இனமாகும்.
HTML Tamil
புலிகளின் பூர்வீகம் ஆசியா ஆகும். ஆசியப் பகுதிகளிலேயே புலிகள் அதிக அளவில் வாழ்கின்றன. புலிகள் சுமார் 26 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
புலிகள் சராசரியாக 3.3. மீட்டர் நீளம் வரை இருக்கும். 300 கிலோ வரைக்கும் புலியின் எடை இருக்கும்.
புலிக்கு இரவு நேரத்தில் மனிதர்களை விட 6 மடங்கு கண் பார்வை கூர்மையாக இருக்கும். ஒரே பாய்ச்சலில் 30 அடிக்கு மேல் குதிக்கும்.
காட்டில் வாழும் புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே வேட்டையாடுவதை விரும்பும். புலிகள் சராசரியாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது.
சிங்கம் பசித்தால் மட்டுமே வேட்டையாடும். ஆனால், புலி எப்போதும் விலங்குகளை வேட்டையாடும் குணம் கொண்டது.
புலிகள், அடர்ந்த காடுகள், சதுப்பு நிலக் காடுகள், புல்வெளிகள் என அனைத்திலும் வாழும் தன்மை கொண்டதாகும்.
பெண் புலிகளை விட ஆண் புலிகள் அளவில் பெரியதாக இருக்கும்.
புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் சுமார் 2 வயது வரை வாழ்கின்றன
பின்னர் தங்களுக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு, புலிக்குட்டிகள் தனியாக வாழ பழகுகின்றன.
புலிகள், பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகளையே வேட்டையாடி, தனக்கு இரையாக்கிக் கொள்கிறது.
புலிகள் சராசரியாக ஒரு நாளில் சுமார் 40 கிலோ வரை மாமிசத்தை உணவாக உட்கொள்ளும்.
புலியின் நெற்றியில் உள்ள கோடுகள், சீன மொழியில் 'அரசன்' என்பதை குறிப்பதாகும்.