Tap to Read ➤
தமிழக முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி பற்றி உங்களுக்கு தெரியுமா?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
Sidhanathan K
சமூக போராளியான இவர் நமது தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.
1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றியவர்.
இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றியவர்.
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
அடையாரில் அனாதை குழந்தைகளுக்காக அவ்வை இல்லத்தை உருவாக்கியவர்.
1952-ல் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கினார். தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956-ல் பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்தது.
சட்டசபை துணைத்தலைவராக இருந்த ஐந்தாண்டுளில் பெண்களுக்கான சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர்.
ஆதரித்த சட்டங்கள் :
தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் இருதார தடைச் சட்டம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் குழந்தை திருமண தடை சட்டம்