செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (AI) துறைகளில் இந்தியா நாளுக்கு நாள் அபரிமிதமான நல்லதொரு வளர்ச்சியை பெற்று வருகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தில் கேட்கப்படும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்தபடியாக அமெரிக்காவில், வழக்குகளை வாதாடும் வகையில் ரோபோ வழக்கறிஞர் அறிமுகம் செய்யப்பட்டது.
அதனை அடுத்து இந்தியாவில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஒடிசா டிவி நெட்வொர்க், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் நியூஸ் ரீடரை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது.
லிசா எனும் பெயர் கொண்ட இந்த ஏஐ வாசிக்க வேண்டிய செய்தியை எழுதி கொடுத்தால் அப்படியே படிக்கும் திறனுடையது.
அச்சு அசலாக பெண் போலவே இருக்கும் லிசா தற்போது ஆங்கிலத்தில் மட்டும் செய்திகளை வாசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த லிசாவால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் செய்திகளை வாசிக்க முடியும். அதிலும், கடினமான வார்த்தைகளைக் கூட திணறாமல் படித்து விடுகிறது.