Tap to Read ➤

மின்சாரத்தில் இயங்கும் சொகுசு கார் அறிமுகம்!

பிரிட்டனின் 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் தயாரிப்பு நிறுவனம் இந்தக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
HTML Tamil
உலகப் புகழ்பெற்ற 'ரோல்ஸ் ராய்ஸ்' ஆடம்பர சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பெக்டர்' என்ற மின்சார காரை தயாரித்துள்ளது.
5 மீட்டர் நீளத்திலும், 2 மீட்டர் அகலத்திலும் உருவாக்கப்பட்ட இந்த மின்சார கார், மிகவும் பிரமாண்டமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
577 எச்பி பவரையும், 900 என்.எம். டார்க்கையும் வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை  காரில் பயன்படுத்தப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மின்சாரத்தால் இயங்கும் இந்த கார் மூலம், ஒரு சார்ஜில் 520 கிலோ மீட்டர் தூரம் வரை பணிக்கலாம் என கூறப்படுகிறது.
3 டன் எடை கொண்ட இந்த ஸ்பெக்டர் சொகுசு கார், வெறும் 4.5 வினாடிகளில், மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டிப்பிடிக்கும் திறன் கொண்டது.
காரின் உட்புற கதவுகளிலும் ஸ்டார்லைட் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4,796 நட்சத்திர லைட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை, வாடிக்கையாளர்கள் தொலைதூரங்களில் இருந்தே நிர்வகிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சொகுசு மின்சார காரில், புதிய தொழில்நுட்பமாக 'ஸ்பிரிட்' எனும் டிஜிட்டல் கட்டமைப்பை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது.
அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மின்சார காரின் விலை, ரூ.7 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த மின்சார கார், சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.