Tap to Read ➤

முறைப்படி நடக்காத திருமணங்கள் செல்லாது..!!

நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.!!
Sidhanathan K
தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் திருமணச் சட்டங்களில் முக்கியமான அம்சம் திருமணங்களை முறையாக பதிவு செய்வதாகும்.
அதன்படி சிறப்பு திருமணங்கள் எங்கு நடந்தாலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, முறையாக திருமணச் சான்றிதழ் பெற்றால் மட்டுமே அந்த திருமணம் அங்கீகரிக்கப்படுகிறது.
சிறப்பு திருமணங்கள் என்பது ஜாதி, மதம், மொழி மற்றும் நாடு ஆகிய அனைத்தையும் கடந்து திருமணம் செய்வதாகும்.
திருமண முறைப்படி நடைபெறாத தம்பதிகளுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டால், அது போலிச் சான்றிதழாகக் கருதப்படும்.
பதிவுத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், தங்கள் வழக்கப்படி எந்தத் திருமணச் சடங்கும் செய்யாமல் இருப்பது, திருமணமான தம்பதி என்ற அங்கீகாரத்தை அளிக்காது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதாவது இந்துக்கள் இருவர் திருமணம் செய்து கொண்டால் தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டம் 2009-ல் கீழ் தங்களின் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு இந்து திருமணம் சட்டப்பிரிவு 7 அல்லது 7 ஏ-ன் கீழ் இருவருக்கும் திருமணம் முறைப்படி நடைபெற்றிருக்க வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்வதற்கு முன், அவர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றதா என்பதை உறுதிப்படுத்துவது பதிவாளரின் கடமை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு திருமணம் நடைபெறாத நிலையில் தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டம் 2009-ல் கீழ் பதிவு செய்ய முடியாது.
திருமண முறைகேடு, குழந்தைத் திருமணம், கணவர்களால் பெண்கள் கைவிடப்படுதல் போன்றவை நடைபெறாமல் தடுக்கவே திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்ட ஆணையம் வலியுறுத்துகிறது.