Varalakshmi N       Jun 25, 2026

தண்ணீர் மட்டும் போதுமா? கிட்னி கல்லைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சிறுநீரகத்தில் தாதுக்கள் மற்றும் உப்புகள் சேர்ந்து கற்களாக       உருவாகும் நிலையே கிட்னி கல் எனப்படுகிறது.

ஆரம்பத்திலேயே அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் கடுமையான பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

கிட்னி கல்லுக்கு உதவும் இயற்கை நிவாரணங்கள்

அதிகமாக தண்ணீர் குடிக்கவும். தினமும் 2.5 முதல் 3 லிட்டர் வரை       தண்ணீர் குடிப்பது கற்களை வெளியேற்ற உதவும்.

எலுமிச்சை சாறு அருந்தவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் புதிய       கற்கள் உருவாகுவதைத் தடுக்க உதவும்.

தேங்காய் தண்ணீர் குடிக்கவும். சிறுநீரக ஆரோக்கியத்த மேம்படுத்தி       சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது.

உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும். அதிக உப்பு கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். பழங்கள் மற்றும்       காய்கறிகளை அதிகரிக்கவும்

உடலின் நீர்ச்சத்தை பராமரித்து சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.

கிட்னி கல் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனித்தால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

போதுமான அளவு தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுதல் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக       வைத்திருக்க உதவும்.