Tap to Read ➤

சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?.. கெட்டதா?

சாக்லேட் பற்றிய சில சுவையூட்டும் தகவல்கள் !!
Sidhanathan K
சாக்லேட் மனநிலையை மேம்படுத்தும். ஏனெனில் இதில் மூளைக்கு உகந்த செரோடோனின் அதிகம் உள்ளது.
சாக்லேட்டின் முக்கிய மூலப்பொருள் கோகோ பவுடர் ஆகும். கொழுப்பு குறைவாக உள்ள கோகோ தூள் 60 சதவீதத்திற்கு மேல் உள்ள சாக்லேட்டுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
சாக்லேட் சாப்பிடுவதால் சில காலம் முதுமையை தாமதப்படுத்தலாம். அதாவது, சாக்லேட் சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் கோடுகளையும் குறைக்கிறது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
இனிப்பு குறைவாக கலந்திருக்கும் டார்க் சாக்லேட்டில் அதிக சாக்லேட் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
30 கிராம் டார்க் சாக்லேட்டில் அதிகபட்சமாக 10 மில்லிகிராம் காஃபின் உள்ளது, அதே சமயம் பால் சாக்லேட்டில் 5 மில்லிகிராம் காஃபின் உள்ளது.
சாக்லேட்டில் மன அழுத்த எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமும் சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 4 கிராம் சர்க்கரை மற்றும் 1 ஸ்பூன் சாக்லேட் பவுடர் குழந்தைகளுக்கு போதுமானது.
சாக்லேட் அதிகமாக சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தும். அத்தகைய அறிகுறிகள் தோன்றினால், அவர்கள் சாக்லேட் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் பல்சொத்தை, தலைவலி, உடல் பருமன், மூளை பாதிப்பு, நீரிழிவு போன்ற பல ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே தினமும் சுமார் 15 கிராம் சாக்லேட் சாப்பிடுவது பிரச்சனையே இல்லை. சாக்லேட்டை அளவாக பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது.