Tap to Read ➤

கண் இமை துடிப்பது நல்லதா? கெட்டதா? அவ்வாறு துடிப்பதன் காரணங்கள் என்ன?

கண் இமை துடிப்பதை எப்படி சரி செய்யலாம் ?
Sidhanathan K
சிலருக்கு கண்கள் துடிக்கும் போது மூடநம்பிக்கையுடனான பயமும் சேர்ந்து கொள்கிறது.
ஆணுக்கு வலது கண் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண் துடிப்பதும் நல்லது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இதில் ஏதாவது மாற்றி துடித்தால் கெட்டது நடக்கும் என்றும் நம்புவதுண்டு.
தூக்கமின்மையில் தொடங்கி மூளை தொடர்பான பிரச்சனைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். மாதக்கணக்கில் கண் துடிப்பு நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
இத்தகைய கண் துடிப்பு மருத்துவத் துறையில் மயோகிமியா (Myokymia) என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து துடிப்பது கண்ணின் நுண்ணிய நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது.
துடிக்கும் கண்கள் நல்லது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கண்கள் துடிப்பது ஆரோக்கியமற்ற உடல் குறைபாடுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
சோர்வு, கண் வறட்சி, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பது, படிப்பது, சரியாகத் தூங்காமல் இருப்பது, மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவை கண் இமை துடிப்புகளை உண்டாக்கும்.
டீ, காபி போன்ற காஃபின் கலந்த பானங்களை அருந்துவது, காஃபினேட்டட் சாக்லேட் சாப்பிடுவது, அதிகமாக மது அருந்துவது போன்றவைகளாலும் கண்கள் துடிக்கும்.
கண் துடிப்போ, வெட்டி இழுப்பது போலவோ இருந்தால் அது மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவும் இருக்கலாம்.
நன்றாக தூங்கி கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுத்தால் கண் இமை துடிப்பு சரியாகிவிடும்.
ஹைட்ரோதெரபியின் இந்த முறை, கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரை மாறி மாறி கண் இமைகளில் தடவுவது கண்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
கையின் நடுவிரலை கண் இமைகளின் மீது வைத்து அரை நிமிடம் வட்ட இயக்கத்தில் விரலை மசாஜ் செய்யவும். இது கண் இமைகளுக்கு இரத்த ஓட்டத்தை தூண்டுவதுடன் கண் தசைகளை பலப்படுத்துகிறது.
பழங்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் இல்லை, ஆனால் கால மாற்றத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் இதுபோன்ற பிரச்சனைகளை பலர் சந்திக்கின்றனர்.
இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாவிட்டாலும், நாட்கள் செல்ல செல்ல பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காலம் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.