Tap to Read ➤

பூஜை அறையில் சுவாமி படம் கீழே விழுந்து உடைந்தால் தீமையா..?

கெட்டது நடக்காமல் இருக்க சில வழிகள்..!!
Sidhanathan K
ஆன்மிகத்தைப் பொறுத்தவரையில் நம் முன்னோர்கள் சில விஷயங்களைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
கண்ணாடி உடைந்தால் வீட்டுக்கு ஆகாது, குங்குமம் தவறினால் கணவருக்கு பிரச்சனை போன்ற பழக்க வழக்கங்களை சிறு வயதில் இருந்தே நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதேபோல் பூஜை அறையில் சுவாமி படங்கள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உடைந்தால் வீட்டில் உள்ளவர்கள் பதற்றம் அடைய வேண்டாம்.
சுவாமி படம் கீழே விழுந்து உடைந்ததற்கு என்ன காரணமாக இருக்குமோ என்று நிறைய கெட்டதை சிந்தித்து மனதை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.
முதலில் உடைந்த சுவாமி படத்திலிருந்து கண்ணாடியை கவனமாக அகற்றவும்.
பின்னர் படத்திற்கு மேலே உள்ள சட்டத்தை கவனமாக அகற்றி ஒரு துணியில் சுற்றி குப்பையில் போடவும்.
இப்போது சுவாமியின் அட்டை மட்டும் மீதம் இருக்கும். அதாவது காகிதத்தில் பதிக்கப்பட்ட சுவாமி உருவபடம் இருக்கும்.
இப்போது சுவாமியின் திருவுருவம் பதிக்கப்பட்ட அட்டை (காகிதம்) மட்டுமே எஞ்சியுள்ளது.
சுத்தமான பக்கெட்டில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூளைக் கரைத்து அதில் சுவாமி படம் அச்சிடப்பட்ட பேப்பரை ஊற வைத்து நன்றாக கரைத்தால், அனைத்தும் தண்ணீரில் கரைந்துவிடும்.
இந்த தண்ணீரை செடி கொடிகள் இருக்கும் இடத்தில் ஊற்றி விடலாம். இதே போல தான் செல்லரித்த நீண்ட நாள் பயன்படுத்தாத சுவாமி படங்களையும் நீங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
பின்னர் மனநிம்மதிக்காக குடும்பத்துடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்து தேங்காய் உடைக்கலாம்.