Sidhanathan K       Jun 29, 2024

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பன்னீர் சாப்பிடுவது நல்லதா..? கெட்டதா..?

இப்போதெல்லாம் பன்னீர் சாப்பிட மக்கள் அதிகம் விரும்புகின்றனர். பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரில் புரோட்டீன் அதிகமாக உள்ளது.

பன்னீர் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாகும்.

ஏனெனில் கிளைசெமிக் இன்டெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை கட்டுப்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு 60 கிராம் என வாரத்திற்கு இரு முறை சாப்பிடலாம்.

பன்னீர் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுகின்றன.

இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.

பன்னீரை தொடர்ந்து உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பன்னீர் எலும்புகள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories