ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நமக்கு தெரிந்த யாரோ ஒருவர் இறந்து போவது போல கனவு கண்டிருப்போம்.
அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியாமல் சற்று குழம்பிப்போய் இருப்போம். இதன் பின்னணியில் நம்பப்படுகின்ற காரணங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நாமே இறந்து விடுவது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.
உறவினர் ஒருவர் இறந்துவிடுவது போல கனவு காண்பது, துன்பங்கள் விரைவில் முடிவடையும் என்பதாகும்.
நண்பர் ஒருவர் இறந்து போவது போல கனவு கண்டால், வெகு விரைவில் நல்லசெய்தி ஒன்று தேடி வரும் என்பதாகும்.
குழந்தை இறந்தது போல கனவு வந்தால், பெரிய ஆபத்து ஏற்படப் போகிறது என்று அர்த்தமாம்.
இளம் மனைவி இறப்பது போல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
இறந்த மனைவி மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அதுவே, சோகமாக இருந்தால் வாழ்க்கை நிலையற்றதாகிவிடும்.
கனவில் விபத்து அல்லது தற்கொலை காரணமாக இறந்தவர்களைக் கண்டால் மோசமான விஷயங்கள் நடக்கும் என்று அர்த்தம். மேலும் இதுபோன்ற கனவுகள் வந்து போன பிறகு, கனவு காண்பவர் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சவப்பெட்டி கனவில் வந்தால் நெருக்கமானவர்கள் யாரோ இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் அழுவது போல கனவு காண்பது நல்லதல்ல.