Sidhanathan K       Jun 17, 2024

ஆட்டு இறைச்சி சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்பது உண்மையா..?

சிலர் மட்டன், சிக்கன் சாப்பிட்டுவிட்டு சுடுதண்ணீர் குடித்தால் கொழுப்பு கரையும் என்று நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. எவ்வளவு வெந்நீர் குடித்தாலும் கொழுப்பையும் கொலஸ்ட்ராலையும் குறைக்க முடியாது.

நாம் செம்மறி ஆட்டுக்கறி மற்றும் வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையான மட்டன்களை சமைத்து உண்கிறோம்.

100 கிராம் செம்மறி ஆட்டில் 25 கிராம் புரதம், 100 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 20 கிராம் கொழுப்பு மற்றும் 300 கலோரி உள்ளது.

ஆனால் 100 கிராம் வெள்ளாட்டில், 130 காலரிதான் உள்ளது. மேலும், 3 கிராம் கொழுப்பு மற்றும் 27 கிராம் புரதம் உள்ளது.

அந்தவகையில், செம்மறி ஆட்டில் கொழுப்பு அதிகம் இருப்பதால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. வெள்ளாட்டுக்கறி சாப்பிட்டாலும்கூட சிலநேரங்களில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிவப்பு இறைச்சி எனப்படும் ரெட் மீட் செரிக்கும்போது, அதில் மெட்டபோலிட் (metabolite) வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

அந்தவகையில், சிவப்பு இறைச்சியிலும் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories