Tap to Read ➤

விமானம் நடுவானில் பறக்கையில் டயர் வெடிக்க வாய்ப்பு உள்ளதா ?

விமானத்தின் டயரில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது ?
Sidhanathan K
விமானம் புறப்படும் போது அல்லது தரையிறங்கும் போது மட்டுமே டயர் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
விமானத்தின் டயர் வெடிப்பதற்கு என்ன காரணம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். டயரில் காற்று அழுத்தம் வேகமாக அதிகரிக்கும் போது டயர் வெடிப்பு ஏற்படுகிறது.
டயரில் காற்று அழுத்தம் மெதுவாக அதிகமானால் விமான டயர்களில் பாதுகாப்பு அழுத்தம் வால்வு (pressure relief valve) காற்றை வெளியேற்றி விடும்.
டயர் ஒடுதளத்தில் ஓடும் போது டயரில் மிகக்குறைவான அல்லது அதிகமான காற்று அழுத்தம் இருந்தாலும் (tyre flexing) வெப்பம் அதிகமாகிவிடும்
இதற்கென்றே பாதுகாப்பாக வெப்பத்தால் உருகக்கூடிய ப்யூஸ் ஒன்று உள்ளது. அது உருகி காற்றை வெளியேற்றிவிடும்.
இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டால் விமானி உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு விமானத்தை தரை இறக்கி விடுவார்.
இல்லையெனில் ஓடுபாதை சோதனையின் போது டயர் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவிப்பார்கள்.
அவ்வாறு தரையிறங்கும்போது அவர் விமானத்தை உரிய முன் ஏற்பாட்டுடன் விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டும்.
தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்படும்.
விமானத்தின் இறக்கை வழியாக அவசர கதவுகள் வழியாக பயணிகள் வெளியேற்றப்படுவார்கள்.
ஆனால் டயர் வெடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும் ஊழியர்கள் எதற்கும் தயாராக இருப்பார்கள்.
முதலில் விமானத்தில் என்ன தவறு ஏற்பட்டாலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பின்னர் தான் மற்ற வேலைகளை கவனிப்பார்கள்.
குறைந்தது நான்கு பின் சக்கரங்கள் உள்ள விமானத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் (வலது/இடது) ஒரு சக்கரம் இல்லாமல் இருந்தாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.