Tap to Read ➤

செவ்வாய் கிழமையிலும் நல்ல காரியங்கள் செய்யலாம்!

நாள், கிழமை பார்த்து செய்கின்ற காரியம் பாதி வெற்றியை தரும் என பெரியவர்கள் சொல்வார்கள்.
HTML Tamil
செவ்வாய்க் கிழமை நல்ல தினமா? என்ற சந்தேகத்தில் பலரும் நீண்ட நாட்களாகவே அந்தக் கிழமையை தவிர்த்து விடுகிறார்கள்.
செவ்வாய்க்கிழமையும் உகந்த நாள்தான். நவகிரகங்களுள் மிகச் சிறந்தது செவ்வாய் கிரகம் ஆகும்.
நவக் கிரகங்களில் செவ்வாய் பகவான் மங்கலகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.
முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமை பார்க்கப்படுகிறது. இந்த நாளில் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமையில் மங்கலப்பொருட்கள் வாங்கினால் செல்வம் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லா சிறப்புகளும் தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது
கடனை திருப்பி தரும் போது செவ்வாய்க்கிழமையில் தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என சொல்லப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை அன்று எந்தவொரு விவாதத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது என முன்னோர்கள்  கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அன்று பூமி பூஜை செய்வது நல்லது என்று மனையடி சாஸ்திரம் கூறுகிறது.