நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
தமிழகத்தில் 900 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளிலும் வெளியானது.
இப்படம் பல வருடங்களுக்கு பிறகு தலைவர் ரஜினிகாந்துக்கு தரமான கம்பேக்காக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.
இந்தியாவில் முதல் நாளில் ரூ.49 கோடி வசூலித்த ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் ரூ.23 கோடி வசூலித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் 1.45 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.12 கோடி) வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 90 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வார விடுமுறை தினங்களை வைத்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.